• inner-slider-01.jpg
  • inner-slider-2.jpg
  • inner-slider-3.jpg
  • inner-slider-5.jpg
  • inner-slider-6.jpg
  • inner-slider-7.jpg
  • inner-slider-8.jpg
  • inner-slider-9.jpg
  • inner-slider-11.jpg
  • inner-slider-new1.png
×

எச்சரிக்கை

3388c34a8dd55d3f2de6bd553ebe6e6e.png-ஐ நீக்குதல் தோல்வியுற்றது.
f8c164678e887a97cfc5fdf70326390f.js-ஐ நீக்குதல் தோல்வியுற்றது.

30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் நல்லிணக்க செயற்பாட்டின் ஒரு அம்சமாக முன்னுரிமையளிக்கப்பட்ட 66 வீதிகளை புனரமைப்பதற்கு அமைச்சரவைப் பத்திரம் கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இந்த வீதி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கேள்வி கோரல்கள் முன்னெடுக்கப்படுவதுடன் அதற்கான நிதிப்படுத்தலுடன் இணைந்த கேள்வி கோரலாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுவது நிரந்தரமான நல்லிணக்கச் செயற்பாடாக நோக்கப்படுவதாக தேசிய ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கேள்வி மனு கோரல்கள் தொடர்பான வேலைத்திட்டங்கள் தேசிய ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சினால் ஏனைய அமைச்சுக்களையும் நிறுவனங்களையும் இணைத்து முன்னெடுக்கப்படுகின்றது. தேசிய ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சின் அமைச்சராக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் செயற்படுவதுடன் அவரது வழிகாட்டலில் அமைச்சின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் போதியளவில் வீதி உட்கட்டமைப்புகள் இன்மை மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதான தடையாக அமைந்துள்ளது. இந்நிலை தனியார் துறையின் முதலீடுகளுக்கு சாதாகமற்றதாக காணப்படுகின்றது. ஆதலாலஇ; வீதி அபிவிருத்தியானது பிரதான முன்னுரிமையளிக்கப்பட வேண்டியதோர் உபாயமாக கருதப்படவேண்டியது அவசியமானதாகும். விவசாய உற்பத்திகள்இ கடற்தொழில் உற்பத்திகள் மற்றும் கால்நடைவள உற்பத்திகள் என்பனவற்றை மேம்படுத்துவதன் ஊடாக மொத்த தேசிய உற்பத்திக்கு வடக்கு கிழக்கு மாகாணங்கள் பாரிய பங்களிப்பினை நல்க முடியும் என்பது உறுதி.

முதற்கட்டமாகஇ தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க முயற்சியின் ஒரு பகுதியாக சுமார் 2500 கி.மீ அளவான வீதி அபிவிருத்தி அதிகாரசபையினதும்இ வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கிராமிய வீதிகள் அண்ணளவாக ஜக்கிய அமெரிக்க டொலர் 200 மில்லியனிற்கு மேற்பட்ட செலவில் புனரமைக்கப்படவுள்ளன. இத்திட்டம் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே பலமான உறவுகளை கட்டியெழுப்புவதற்கும் மக்களிடையே ஒருமைப்பாடுஇ நல்லிணக்கம் சகவாழ்வு மற்றும் நிலைபேறான சமாதானத்தை தோற்றுவிப்பதற்கும் பொருளாதார அபிவிருத்தியுடன் வறுமையை இல்லாதொழிப்பதற்கும் வழிவகுக்கும் என தேசிய ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் வழுக்கையாறு புங்குடுதீவுஇ குறிகட்டுவான் வீதிஇ யாழ்ப்பாணம் மானிப்பாய் காரைநகர் வீதிஇ யாழ்ப்பாணம் புன்னாலை பருத்தித்துறை வீதிஇ எழுதுமட்டுவாள் நாகர்கோயில் வீதி உட்பட அச்சுவேலி கைத்தொழில் பேட்டை வீதிஇ மண்டைதீவு அல்லைப்பிட்டி வீதிஇ கிராமிய வீதிகளும் நயினாதீவு மற்றும் குறிகட்டுவான் இறங்குதுறைகள் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் முறிகண்டி கனகபுரம் - பரந்தன் வீதி மற்றும் முல்லைத்தீவு கொக்கிளாய் ஏரியை இணைக்கும் பாலம்இ வட்டுவாய்க்கால் பாலம்இ வற்றாப்பளை பிரதான வீதி மற்றும் மன்னார் மாவட்டத்தில் மகிளங்குளம் பள்ளமடு வீதிஇ பிரமநாளங்குளம் வீதிஇ பெரியபண்டிவிரிச்சான் குளம் - முள்ளிக்குளம் வீதி எனவும் மட்டக்ளப்பு மாவட்டத்தில் கிரான் பாலம்இ சந்திவெளி திக்கிலி வேட்டை பாலம்இ மட்டக்களப்பு கல்குடா மரைன் வீதி ஆகியவை உட்பட பல வீதிகள் பாலங்கள் புனரமைக்கப்படவுள்ளன. இத்திட்டத்தில் திருகோணமலைஇ அம்பாறை உள்ளடங்கலாக வட கிழக்கு மாவட்டங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான திட்ட தயாரிப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையிலான வடக்கு கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தி குழுவின் வழிகாட்டலின் கீழ் தேசிய ஒருங்கிணைப்புக்கும்இ நல்லிணக்கத்திற்குமான அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையிலான பொருளாதார முகாமைத்துவத்திற்கான அமைச்சரவை குழுவின் சிபார்சுடன் அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுள்ளது என தேசிய ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.

Copyright © 2017. All Rights reserved.
Solution By: Lankacom