• inner-slider-01.jpg
  • inner-slider-2.jpg
  • inner-slider-3.jpg
  • inner-slider-5.jpg
  • inner-slider-6.jpg
  • inner-slider-7.jpg
  • inner-slider-8.jpg
  • inner-slider-9.jpg
  • inner-slider-11.jpg
  • inner-slider-new1.png
×

எச்சரிக்கை

3388c34a8dd55d3f2de6bd553ebe6e6e.png-ஐ நீக்குதல் தோல்வியுற்றது.
f8c164678e887a97cfc5fdf70326390f.js-ஐ நீக்குதல் தோல்வியுற்றது.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கியதாக வடமாகாணத்தில் வாழ்கின்ற போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கான முன்னெடுப்புக்களை   "மனத்தை ஆற்றுப்படுத்தல் மூலம் மதிப்புக்குரிய வாழ்வு" திட்டத்தின் கீழ் மேற்கொண்டுள்ளது என தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், குடும்ப தலைவரை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள், காணாமல் போனோரைக் கொண்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், ஊனமுற்ற குடும்ப தலைவரை கொண்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், இடம்பெயர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள், தாயகம் திரும்பும் பெண் தலைமைத்துவ அகதி குடும்பங்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு ரூபா 100,000 பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்படும். இதில் விவசாய உபகரணங்கள், கடற்தொழில் சார்ந்த உதவித்திட்டங்கள், சுயதொழில் உதவித்திட்டங்கள், கைவினைக் கைப்பணி சார்ந்த உதவித்திட்டஙகள், கால்நடை மற்றும் கோழிவளர்ப்பு, சிறுதொழில் முயற்சிகள் உள்ளூர் விவசாய உற்பத்தி பழங்கள், மரக்கறி மற்றும் தானிய உற்பத்தி போன்றவை இதில் அடங்கும். இவ் வாழ்வாதார திட்டமானது சர்வதேச மகளிர் தினத்தை குறிக்குமுகமாகத் தொடங்கப்பட்டது என அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.

முதற்கட்டமாக 132 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் நன்மை பெறுவர். இத்திட்டத்தின் மொத்த கிரயம் ரூபா 14 மில்லியன்களாகக் காணப்படுவதுடன் எதிர்காலத்தில் மேலும் பல குடும்பங்களுக்கு விஸ்தரிக்கப்படும்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தெல்லிப்பழை பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள ஊரணி கிராமம் பரடயினரால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சானது மீன்பிடி சமுதாயத்திற்காக நங்கூரமிடும் தளங்கள் மற்றும் இறங்கு தளங்கள் என்பவற்றை நிர்மானிப்பதற்காக ரூபா 4.6 மில்லியனை மாவட்ட செயலாளருக்கு வழங்கியுள்ளது. பெரும் எண்ணிக்கையான மீன்பிடி குடும்பங்கள் நங்கூரமிடும் தளங்கள் மற்றும் இறங்கு தளங்கள் ஊடாக நன்மையடைவதோடு தமது வாழ்வாதார நடவடிக்கைகளை மீள தாபித்துகொள்வதுடன் தேசிய அபிவிருத்தி நீரோட்டத்தில் பங்குகொள்ள கூடியதாக இருக்கும் என தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.

இம் முன்னெடுப்புக்கள் விரைவான பெறுபேறுகளை தரக்கூடிய கருத்திட்டங்களாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் நல்லிணக்க செயற்பாட்டின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டவையாகும்.

Copyright © 2017. All Rights reserved.
Solution By: Lankacom