• inner-slider-01.jpg
 • inner-slider-2.jpg
 • inner-slider-3.jpg
 • inner-slider-5.jpg
 • inner-slider-6.jpg
 • inner-slider-7.jpg
 • inner-slider-8.jpg
 • inner-slider-9.jpg
 • inner-slider-11.jpg
 • inner-slider-new1.png
×

எச்சரிக்கை

3388c34a8dd55d3f2de6bd553ebe6e6e.png-ஐ நீக்குதல் தோல்வியுற்றது.
f8c164678e887a97cfc5fdf70326390f.js-ஐ நீக்குதல் தோல்வியுற்றது.

அமைச்சின் கடமைகளும் பணிகளும் (2015 திசெம்பர் 18 ஆம் திகதிய 1945/41 ஆம் இலக்க வர்த்தமானிக்கமைவாக)

   1. நாட்டில் தேசிய ஒருங்கிணைப்பையும் நல்லிணக்கத்தையும் நிலைத்திருக்கக்கூடிய சமாதானத்தையும் ஊக்குவித்து முன்னேற்றுதல்.
   2. தேசிய ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்துக்குமான ஒரு தேசியக்கொள்கையை வகுத்தமைத்தல்.
   3. நல்லிணக்கத்தை முன்னேற்றும் வகையிலும், அனைவரையும் உள்ளடக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதினூடாகத் தேசிய ஐக்கியத்தை உருவாக்கும் வகையிலும் நிகழ்ச்சித்திட்டங்களையும் கருத்திட்டஙகைளையும் வகுத்தமைத்தல்.
   4. வெளிக்கள மட்டத்தில் நடைமுறைக்கிடப்படும் இயைபுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டகளின் கண்காணிப்பும் மதிப்பீடும்.
   5. தேசிய ஒருங்கிணைப்புக்கான மட்டுப்பாடுகளை இனங்கண்டு, இயைபுள்ள நலன் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் இணக்க நடவடிக்கைகளினடிப்படையில் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
   6. தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம், சமாதானத்தை கட்டியெழுப்புதல் தொடர்பில் செயற்படும் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பாகச் செயற்பட்டு அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கிடையில் பிரச்சினைகள் இருப்பின் அவற்றைத் தீர்த்துவைத்தல்.
   7. தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் சம்பந்தமாக தற்போது நடைமுறைக்கிடப்படும் மற்றும் நடைமுறைக்கிடப்படவுள்ள பல்வேறு தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்கப் பணியக உத்திகளை மீளாய்வு செய்தலும் விவகாரங்களுக்குத் தீர்வுகாண்பதில் இடையீடு செய்தலும்.
   8. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைக்குடுவதோடு தொடர்புற்ற விடயங்களில் இடையீடு செய்தல்.
   9. பின்வருவன தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குதல்.

                                       (அ) நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு                                                         அவசியமான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள்.
                                      (ஆ) சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்க செயன்முறையில்எ                                                     ழக்கூடிய விவகாரங்கள் மற்றும்
                                      (இ) இத்தகைய விவகாரங்களுக்கு பொருத்தமான தீர்வுகளை முன்மொழிதல்                                                      தொடர்பாக அலுவலர்களுக்கு

   1. மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சித்திட்டங்களையும் கருத்திட்டங்களையும் நடைமுறைக்கு இடுவதற்கான நிதிகளைத் தேடிப்பெற்றுக் கொள்ளல்.
   2. II ஆம் நிரலில் காட்டப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள ஏனைய சகல விடயங்களும்
   3. II ஆம் நிரலில் காட்டப்பட்டுள்ள நிறுவனங்களைக் கண்காணித்தல்.

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் கீழுள்ள திணைக்களங்கள், நியதிச்சட்ட நிறுவனங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள்.

   • தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் (அமைச்சின் ஆணையை நிறைவேற்றுவதற்காக பொறுப்பளிக்கப்பட்டது)
Copyright © 2017. All Rights reserved.
Solution By: Lankacom