• inner-slider-01.jpg
  • inner-slider-2.jpg
  • inner-slider-3.jpg
  • inner-slider-5.jpg
  • inner-slider-6.jpg
  • inner-slider-7.jpg
  • inner-slider-8.jpg
  • inner-slider-9.jpg
  • inner-slider-11.jpg
  • inner-slider-new1.png

நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமான நிலைபேறான சமாதானம், ஒற்றுமை என்பவற்றை நிலைநாட்டுவதை நோக்காக கொண்டு இந்நாட்டுப் பிரசைகளிடையே  தேசிய          ஒருமைப்பாட்டினையும், நல்லிணத்தினையும் கட்டியெழுப்பும் மாபெரும் பொறுப்பு தேசிய ஒருமைப்பாடு  மற்றும் நல்லிணக்க  அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு இவ்வமைச்சானது அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வருவதுடன் பொறுப்பான  அமைச்சராக அதிமேதகு சனாதிபதி உள்ளார். அமைச்சரவை அங்கீகாரத்திற்கு  அமைவாக, சனவரி 8 -14 ஆம் திகதிவரையான காலப்பகுதி ஒவ்வொரு வருடமும் “​தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க வாரம்” ஆக  பிரகடனப்படுத்தப்பட்டது.

royal 1

royal 2

royal 3

royal 4

 

 

 

 

 

 

 

 

இதன் பிரதான நோக்கம் இன, மத, கலாசார மற்றும் பிரதேசங்களால்​ வேறுபட்ட சமூகத்தினரிடையே ஒற்றுமை, சமாதானம், கருணை, சகிப்புத்தன்மை, நல்லிணக்கம், ஒருமைப்பாடு, பல்லின தன்மைக்கு மதிப்பளித்தல், சமத்துவம், நீதி மற்றும் மனித உரிமைகள்  என்பவற்றை மேம்படுத்துவதாகும். இது “வளம்மிக்க தேசத்தை கட்டியெழுப்பும்” ஒரு முயற்சி என்பதுடன் மக்களிடையே சாந்தி, சமாதானம், அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம்  ஆகியவற்றை விருத்திசெய்து “வேற்றுமையில்  ஒற்றுமையை” ஏற்படுத்துவதேயாகும் என தேசிய  ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க  அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார்.

தேசிய  ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க  வாரத்தினுள் நாடு பூராவும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிக்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளன.

அ) தேசிய  ஒருமைப்பாட்டை  பாடசாலை மாணவர்களிடையே  ஏற்படுத்தல்.

தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை பறைசாற்றுகின்ற  இத்  தேசிய வாரத்தினுள் நாடு பூராவுமுள்ள அனைத்து பாடசாலைகளின் காலைக் கூட்டங்களிலும், வகுப்பறைகளிலும் மாணவர்களினால் தேசிய ஒருமைப்பாடு தொடர்பாக உரையாற்றல் மற்றும் தேசிய பிரகடனத்தை வாசித்தல்.

ஆ) பிரகடனத்தை வாசித்தல்

அரச  அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களால் நல்லிணக்க  பிரகடனத்தை வாசித்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களை  மாற்றத்தை  ஏற்படுத்தும் முகவர்களாக மாற்றுதல்.

இ) மாவட்ட நல்லிணக்க குழுக்களின் கலந்துரையாடல் கருத்தரங்கு.

மாவட்ட நல்லிணக்க குழுக்கள் மாவட்ட மட்டங்களில் ஏற்படுகின்ற இன மத முரன்பாடுகளையும் பதட்டங்களையும் தணிப்பதற்காக  அமைக்கப்பட்டது. இக்குழுக்களின்  அங்கத்தவர்கள் இக்குழுக்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ஈ) தேசிய ஒருமைப்பாடு  மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தல்.

தேசிய ஒருமைப்பாடு  மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தலுடன் தொடர்பான ஆக்கங்களுக்கு விருது வழங்குதல். சமாதான ஊடகவியலை  ​ மேம்படுத்தலுடன் தொடர்பான ஆக்கங்களை இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளல்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு, பாடசாலை மாணவர்கள், அரச அலுவலர்கள், தனியார் துறை, சமயத்தலைவர்கள், அபிவிருத்திப் பங்காளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றில் பிரகடனத்தை வாசிப்பதோடு சமாதானம், ஒற்றுமை மற்றும் நிலைபேறான சமாதானம் என்பவற்றை மேம்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என தேசிய  ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க  அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார்.

Copyright © 2017. All Rights reserved.
Solution By: Lankacom